ஒட்டுசுட்டானில் காட்டு யானைகள் தொல்லையால் மக்கள் அவதி!

ஒட்டுசுட்டானில் காட்டு யானைகள் தொல்லையால் மக்கள் அவதி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மேழிவனம் பகுதியில் அன்றாடம் காட்டுயானைகள் தொல்லையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள மேழிவனம் பகுதியல் தற்போது 52 வரையான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் குறித்த பகுதியில் உள்ள மக்கள் அன்றாடம் காட்டு யானைகளின் தொல்லையை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விவசாயத்தை நம்பி வாழும் மக்களின் அதிகளவானோர் தற்போதும் பயிர் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றபோதும் தினமும் இவர்களது பயிர் செய்கைகளை காட்டுயானைகள் அழத்து வருகின்றன.

எனவே தமது எதிர்காலத்தை கருத்திற்கொண்டுயானைகளுக்கான பாதுகாப்பு வேலிகள் அமைத்துத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இப்பகுதியில் காட்டு யானைகளின் தொல்லையால் ஒரு சில குடும்பங்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 6313 Mukadu · All rights reserved · designed by Speed IT net