யாழ். சிறையில் வைத்து பிரதம ஜெயிலர் சொன்ன அறிவுரை!
சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்படுமாக இருந்தால் நாட்டில் 75 சதவீதமான போதைப்பொருள் பாவனை தடுக்கப்படும் என யாழ். சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றையதினம் இடம்பெற்ற ஜனாதிபதியின் தமிழ் சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு போதைப்பொருளை ஒழிப்போம், போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடுவோம் எனும் தொனிப்பொருளிலான சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் எம்.எல்.மலின் லோவின் ஆலோசனையில், வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் எம்.எப்.லாகீரின் வழிகாட்டலில், யாழ். சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ந.பிரபாகரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாம் இன்றைய தினம் போதைப்பொருளை ஒழிப்போம், போதைப்பொருளை கட்டுப்படுத்துவோம் என்னும் தொனிப்பொருளில் சத்திய பிரமாணத்தை மேற்கொண்டுள்ளோம்.
எனினும் அந்த சத்திய பிரமாணத்தை வாயளவில் நாங்கள் உச்சரித்துவிட்டு செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
எனவே நாம் சிறைச்சாலைக்குள் இந்த போதைப் பொருளை ஒழிப்போமாக இருந்தால் நாட்டில் 75 வீதமான போதைப்பொருள் பாவனை குறைவடையும் என குறிப்பிட்டுள்ளார்.