சர்ச்சையில் சிக்கிய வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன்…!
வடக்கில் பௌத்த மாநாட்டை தவிர்த்திருந்தால் தற்போது எழுகின்ற சர்ச்சைகளில் இருந்து வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தப்பியிருக்கலாம் என வடமாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழில், நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
என்னைப் பொறுத்தவரையில் சில விடயங்கள் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை, அதுபோலவே இதுவும் தவிர்த்திருக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்த மாநாட்டை நடத்தியதால் பல சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே இதனை நடத்தாமல் விட்டிருந்தால் இந்தச் சர்ச்சைகளில் இருந்து ஆளுநர் தப்பித்திருக்கலாம்.
அத்துடன் நாங்கள் பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்லர்.
இலங்கையில் பௌத்த மதம் என்றாலே சிங்களம் என்றாகிவிட்ட ஒரு நிலை காணப்படுவதாலேயே வடக்கில் பௌத்த மாநாடு நடைபெறுவதை இங்குள்ளவர்கள் எதிர்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.