கிளிநொச்சியல் காட்டுயானைகளினால் மக்கள் பாதிப்பு

கிளிநொச்சியல் காட்டுயானைகளினால் மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி கல்மடுநகர்ப்பகுதியில் தொடரும் காட்டுயானைகளின் தொல்லையால் அங்கிருந்து தாங்கள் வேறு கிராமம் நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை தோன்றியுள்ளதாக மேற்படி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் றங்கன்குடியிருப்பு நாவல்நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.

குறிப்பாக, இந்தப்பிரதேசத்திற்குள் பகல் வேளைகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுகின்றது.

குறித்த பிரதேசங்களில் காட்டுயானைகளால் பெருமளவான பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பாக பதிவுகளை மேற்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள் இந்தப்பிரதேசத்தில் யானைகளை கட்டுப்படுத்த நிரந்தரமான ஒரு தீர்வு பெற்றுத்தரவேண்டுமென கோரியுள்ளனர்.

இது தொடர்பில் கண்டாவளைப்பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் அவர்கள் குறித்த பிரதேசத்தில் யானைத்தாக்கங்கள் தொடர்பில் மக்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தப்பிரதேசத்தில் ஏழு கிலோமீற்றர் தூரம் வரையான பகுதிக்கு யானை வேலி அமைத்துத்தருமாறும் மக்களால்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அண்மையில் யானைகளால் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பிலும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கையிடப்பட்டு இழப்பீடு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 9080 Mukadu · All rights reserved · designed by Speed IT net