முதலைகடித்து மட்டக்களப்பை சேர்ந்த பெண் பலி!
கொக்கட்டிசோலை, வில்லுகுளம் ஏரியில் குளிக்க சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றமையினால் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான நல்லத்தம்பி எல்லையம்மா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்துக்குட்பட்ட கடுக்காமுனை வால்கட்டுகுளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை நீராடச்சென்ற பெண் ஒருவர் முதலைகடித்ததில் உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் கடுக்காமுனை சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான இளையதம்பி நல்லம்மா என உறவினர்கள் அடையாளங்காட்டியுள்ளனர்.
குறித்த குளத்தினை அருள்நேசபுரம், சோதன்கட்டு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக பாவித்துவருவதாகவும் ஆனால் முதல்தடவையாக ஒருவரை முதலைகடித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.