மாவீரர் மேஜர் பசிலன் அவர்களினன தாயார் காலமானார்.
தாயக மண்மீட்பு வரலாற்றில் தடம்பதித்த முல்லை மண்ணின் சொந்தக்காரன் மாவீரன் மேஜர் பசிலன் அவர்களின் தாயார் நேற்று காலமானார்.
தாயக விடுதலைப்போராட்டத்தில் தனது தனையனுக்கு நிகராக தாய்மண்ணுக்கும் போராளிகளுக்கும் உணவு உறையுள் பாதுகாப்பு வழங்கி சேவையாற்றிய அன்னை.
அனைவராலும் பசிலன் அம்மா என அன்பாக அழைக்கப்பட்ட அற்புதமான மனிதர்.
கொண்ட கொள்கையில் துணிவுடன் வாழ்வின் இறுதி மூச்சு வரை உறுதியாக இருந்தவர்.
தாயக விடுதலைப் போராட்டத்தின் பல பரிமானங்களின் காலத்தில் தனது பணியை நேர்த்தியாக செய்தவர்.
உயிரிலும் பெரிது உரிமை தாயக விடுதலையென வாழ்ந்தவர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையால் பெரிதும் மதிக்கப்பட்ட உன்னதமான தாய்.
சென்ற வருடம் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பிரதான முதன்மைச் சுடரை ஏற்றியவர்.
முதுமையின் காரணத்தினால் அன்னையவர் நேற்றைய தினம் காலமானார்என்ற செய்தி காற்றலைவழியாக உலகமெங்கும் பரவியது.
என்ன செய்வது மனிதர் பிறந்த போது இறப்பு என்பதும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று தானே. இதை யாராலும் மாற்ற முடியாது.
மனதை தேற்றியவாறு அன்னையின் ஆத்மா சாந்தி பெற இறைவனிடம் வேண்டுவோம்.