வடக்கு ஆளுநரை சந்தித்த புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர்.

வடக்கு ஆளுநரை சந்தித்த புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர்.

யாழ் மாவட்டத்தின் புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்த ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று (05) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருவருக்குமிடையில் யாழ்மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது வன்செயல்கள் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிகளில் அதிக பொலிஸ் கண்காணிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.

Copyright © 8588 Mukadu · All rights reserved · designed by Speed IT net