செம்மணியில் இரவோடு இரவாக முளைத்த கிறிஸ்தவ மத வாசகங்கள்!!

செம்மணியில் இரவோடு இரவாக முளைத்த கிறிஸ்தவ மத வாசகங்கள்!!

நல்லூர் – செம்மணிச் சந்தியில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகை ஒன்றால் நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பதாகை நடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதால் பொலிஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந்து சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தனர்.

அத்துடன் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் சாரதியிடன் பொலிஸார் வாக்குமூலத்தைப் பெற்றனர்.

இந்தப் பதாகை இரவு 7 மணியளவில் நடப்பட்டதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் அறிந்த ஊடகவியலாளர்களும் அங்கு கூடினர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளைவு கத்தோலிக்க மக்களால் அகற்றப்பட்டதையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை போன்று இங்கு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net