ஓமந்தையில் லொறி குடைசாந்து விபத்து :ஒருவர் காயம்!
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரிக்கு அருகே இன்று மாலை 5.30 மணியளவில் லொறி குடைசாந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த ஓமந்தை பொலிஸாரின் வாகனம் சேமமடு வீதிக்கு ( வீதியின் மறுபக்கம்) திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பொலிஸாரின் வாகனத்திற்கு பின்புறமாக சென்று கொண்டிருந்த பொலிஸாரின் வாகனம் திடீரென திரும்புவதை லொறியின் சாரதி அவதானித்துள்ளார்.
இதன் போது பதட்டத்தில் லொறி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து குடைசாந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் லொறியில் பயணித்த உதவியாளர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.