அபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வே கூட்டமைப்பின் முக்கிய நோக்கம்!
அபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினை ஆகிய இரண்டு விடயங்களிலேயே கூட்டமைப்பு அதிகம் கவனம் செலுத்துவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அபிவிருத்தியும் இன பிரச்சினைக்கான தீர்வும் ஒரே நேர்கோட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா பண்டாரிகுளம், உக்கிளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மகளீர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
முக்கியமாக அபிவிருத்தி மற்றும் இன பிரச்சினை ஆகிய இரண்டு விடயத்தில் மாத்திரமே தாம் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அவை இரண்டும் ஒரே நேர் கோட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தாம் எண்ணுவதாக தெரிவித்தார்.
ஆயுத போராட்டத்தின்போது மக்கள் தாங்களாகவே போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்ததாகவும், ஆனால் தற்போது போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் மக்களின் பசியையும் போக்கி போராட்டத்தையும் செய்ய வேண்டிய நிலையில் தாம் உள்ளதாக குறிப்பிட்டார்.