கன்னியா வென்னீருற்றில் முறையற்ற வகையில் துஸ்பிரயோகம்?

கன்னியா வென்னீருற்றில் முறையற்ற வகையில் துஸ்பிரயோகம்?

இந்துக்களது தொல்லியல் வரலாற்று அடையாளம் மிக்க கன்னியா வென்னீருற்றினுள் தெற்கினை சேர்ந்த சிலரும் வெளிநாட்டவரும் முறையற்ற வகையில் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இராவணேஸ்வரன் சிவனை வழிபட உருவாக்கியதாக சொல்லப்படும் கன்னியா வென்னீருற்று தற்போது முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பௌத்த மத சின்னங்களை அவமதித்தல் மற்றும் சேதப்படுத்தலிற்கு முண்டியடிக்கும் இலங்கை தொல்லியல் திணைக்களம் இதனை கண்டுகொள்ளவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி பாதுகாப்பிற்குரிய பகுதியென தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 3073 Mukadu · All rights reserved · designed by Speed IT net