யாழில் மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் வைத்தியசாலையில்!

யாழில் மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் – கைதடியில் வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ தினமான நேற்று (செவ்வாய்க்கிழமை) வீட்டில் இருந்தபோது தாகமாக இருக்கின்றதென குளிர்பான போத்தலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை குளிர்பானம் என கருதி குடித்துள்ளார்.

இதனையடுத்து சிறுவனை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிறுவன் மாற்றப்பட்டுள்ளாரென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net