கடற்படைக்கு காணியா?- மக்கள் கடும் எதிர்ப்பு!!

கடற்படைக்கு காணியா?- மக்கள் கடும் எதிர்ப்பு!!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினருக்காக, 18 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கு மேற்கொள்ளப்படவிருந்ம நில அளவை நடவடிக்கை மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மண்டைதீவு கிழக்கு அம்மன் கோவில் முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படைமுகாம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாக சுவீகரித்து படை முகாமினை விஸ்தரிப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக குறித்த காணியை சட்ட ரீதியில் சுவீகரிப்பதற்கான முன்னெடுப்புக்களை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கான நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக நில அளவை திணைக்களத்தினால் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து நில போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் எதிர்பை அடுத்து நில அளவை திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net