யாழில் வான் கடத்தல்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
யாழ். பரவிப்பாஞ்சான் பகுதியில் வான் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் தமது வாடகை வான் கடத்தப்பட்டுள்ளதாக உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு செல்வதற்காக நபர் ஒருவர், வான் ஓட்டுனருடன் வானில் பயணித்துள்ளதோடு வவுனியாவில் வைத்து இன்னுமொருவரை வானில் ஏற்றியுள்ளார்.
வான் ஹொரவ்பொத்தான வீதியூடாக சென்று கொண்டிருந்த வேளை வானை நிறுத்திய இருவரும் வான் ஓட்டுனரிடம் கத்தியை காண்பித்து 280,000 ரூபாய் பணத்தையும், வானையும் கடத்திச் சென்றுள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.