கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நாய்கள் சரணாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கட்டாகாலி நாய்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் குறித்த நாய்கள் சரணாலயம் இயக்கச்சி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் குறித்த நாய்கள் சரணாலயம் இன்று பிற்பகல் 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
அதிக இனப்பெருக்கம், வீதியோரங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் நாய்களை பாதுகாப்பதற்காக குறித்த நாய்கள் சரணாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், நல்லை ஆதீன குருமுதல்வர், அமெரிக்காவின் ஹவாய் சைவ ஆதீன சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு குறித்த நாய்கள் சரணாலயத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பா.ம உறுப்பினர் சிறிதரன் குறிப்பிடுகையில்,
யாழ்.மாவட்டத்தில் பல்லாயிரம் மக்கள் காணிகள் இல்லாது இருக்கின்றனர். அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் காணி இல்லாது பல குடும்பங்கள் உள்ளனர்.
ஏறத்தால 20ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் காணி இல்லாமால் வாழ்கின்றனர்.
இந்த பிரதேசத்தில் பல ஏக்கர் காணிகள் காணி மறுசீரமைப்பு திணைக்களத்தின் கீழ் உள்ளது.
அதனை தலா 20 பேர்ஜ் அளவில் மக்களிற்கு பகிர்ந்தளிக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.
ஆனால் காணி இல்லாத மக்களிற்கு குறைந்தது கால் ஏக்கர் காணியாவது வழங்க வேண்டும் என அவர் குறித்த நிகழ்வில் தெரிவித்தார்.