வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பரல் மீட்பு.

வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பரல் மீட்பு : வயோதிபர் கைது!

வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பரல் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரான வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று சனிக்கிழமை (13.04.2019) மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் கரவெட்டி காட்டுப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கசிப்பு விற்பனை செய்யப்படுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 30 லீற்றர் கசிப்பினை மீட்டதுடன் அவ் வீட்டின் உரிமையாளரான 64 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்ததாக நெல்லியடி பொலிசார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட வயோதிபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 5720 Mukadu · All rights reserved · designed by Speed IT net