பெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமம்.

பெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமம்.

பெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

பெண்கள் எதிர்கொள்ளம் பிரச்சினைகள், முறைப்பாடுகளை பொலிசாரிடம் முறைப்பாடு செய்து கொள்ளவும், வெளிப்படையாக அனைத்து விடயங்களையும் தெரிவிக்கவும் முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் 33 தமிழ் பெண் பொலிசார் பயிற்சி நிறைவுற்று வெளியேறியுள்ள நிலையிலும் இவ்வாறான குறித்த பொலிஸ் நிலையங்களில் நியமிக்கப்படவில்லை.

குறித்த பயிற்சி நிறைவு செய்தவர்களில் சில பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையங்களில் கடமைகளை பொறுப்பேற்றுள்ள போதிலும், அவர்களிற்கு தமிழ் மொழி தெரியவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் பிரச்சினைகளை கையாளக்கூடிய வகையில் நீண்டகாலமாக காணப்படும் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா அவர்களிடம் பலமுறை கூறியும் அதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தமிழ் பேசும் பெண் பொலிசார் இல்லாத நிலையில் தமிழ் மொழி தெரிந்த ஆண் பொலிசாரே முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படையாக கூறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த பிரச்சினையை உடன் நிவர்த்தி செய்யும் வகையில், தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை விரைந்து நியமிக்குமாறும், பெண்கள் தமது பிரச்சினைகளை உரிய முறையிலும், வெளிப்படையாகவும் கூறுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Copyright © 2823 Mukadu · All rights reserved · designed by Speed IT net