மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது!

மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது!

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய், உடுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களையே பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) கைதுசெய்துள்ளனர்.

குறித்த பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மானிப்பாய் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Copyright © 8635 Mukadu · All rights reserved · designed by Speed IT net