விசமிகள் அட்டகாசம்: வீதி சமிக்ஞைகள் உடைப்பு.
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளில் காணப்பட்ட வீதிச்சமிக்ஞைகளை இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கியுள்ளனர்.
பாரதிபுரம் தொடக்கம் இராசேந்திரகுளம் வரையிலான வீதிகளில் காணப்பட்ட பாதாசாரிகள் கடவை முன்னால், பஸ் தரிப்பிடம், முன்னால் வளைவு போன்ற பாதாதைகளை நேற்று இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இடத்தில் நின்று நேற்றையதினம் இரவு இளைஞர்கள் மதுபாவனையில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியமையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் சேதமடைந்துள்ள வீதிச்சமிக்ஞைகளை மீள அவ்விடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.