யாழ்-மீசாலையில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்!
மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த 65 வயதுடைய இருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கை மற்றும் முதுகு பகுதிகளில் எரி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரு முதியவர்களும் நேற்றைய தினம் புதன்கிழமை மரம் ஒன்றின் கீழ் உரையாடி கொண்டு இருந்த வேளையே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகினர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை யாழில் கடந்த செவ்வாய்க்கிழமை மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.