கிளிநொச்சியில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வட மாகாணசபை முன்னள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தவிசாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.