கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!
சித்திரை புது வருட விடுமுறை காலமாக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் கிழக்கு மாகாணத்தை நோக்கி வருகின்றனர் என தகவல் கிடைத்துள்ளது.
தமிழ், சிங்கள சித்திரை புது வருடத்தை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள விடுமுறை காலமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றது.
வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களை நோக்கியே சுற்றுலா பயணிகளாக வருகின்றனர்.
அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி கடற்கரை, திருகோணமலை கடற்கரை, பளிங்கு கடற்கை, கோணஸ்வர கோவில் மற்றும் கன்னியா சுடுநீர் கிணறு போன்ற சுற்றுலா தளங்களுக்கும் விஜயம் செய்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில், வெள்ளை மணல் பிரதேசத்தில் பிரசித்தி பெற்றுக் காணப்படுகின்ற கருமலையூற்று கடற்கரை, பளிங்கு கடற்கரை போன்ற இடங்களில் அதிகளவானவர்கள் வருகை தந்து நீராடி குளிப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.