வெலிஓயா பிரதேசத்திற்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் விஜயம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலி ஓயா பிரதேசத்திற்கு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நேற்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது குறித்த பிரதேசத்தின் சமய தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோரை சந்தித்து பிரதேசத்தில் நிலவி வரும் பிரச்சினைகள், அபிவிருத்தி திட்டங்கள், கல்வி, சுகாதார நிலைமைகள் தொடர்பில் கலந்தாலோசித்துள்ளார்.