கொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி!

கொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி!

கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவின் உறவினரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் சலீமின் பேரன் ஜயான் சவுத்ரி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷேக் ஹசீனாவின் உறவினர்களான, தாய், தந்தை, இரு மகன்கள் என கொழும்பிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது சிறுவனின் தந்தை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, 8 வயதான ஜயான் சசுத்திரி என்ற ஷேக் ஹசீனாவின் பேரன் காணாமல் போயிருந்த நிலையில், அவர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 5053 Mukadu · All rights reserved · designed by Speed IT net