ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய கருவியுடன் ஒருவர் கைது!

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய கருவியுடன் ஒருவர் கைது!

நிட்டம்புவ – கல்லெலிய பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர், இரண்டுடன் கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 8 சிம் அட்டைகளை ஒரே தடவையில் குறித்த தொடர்பாடல் கருவி ஊடாகப் பயன்படுத்த முடியும் என்றும், இந்த சிம் அட்டைகள் வெளிநாடுகளுக்கு இலவசமாக அழைப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டதென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெயாங்கொட பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றினை சோதனையிட்ட போது, அதில் சந்தேகத்துக்கிடமான முறையில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் இருவரிடமும் இளைஞரொருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்களுள் கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வாள்களை விநியோகித்ததாகக் கூறப்படும் நபரின் மனைவியும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © 1547 Mukadu · All rights reserved · designed by Speed IT net