அல்லைப்பிட்டி பள்ளிவாசலில் இராணுவம் பயன்படுத்தும் பொருட்கள் மீட்பு!

அல்லைப்பிட்டி பள்ளிவாசலில் இராணுவம் பயன்படுத்தும் பொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பள்ளிவாசலில் இன்று காலை விசேட அதிரடிப்படையினா் மற்றும் இராணுவம், பொலிஸாா் இணைந்து நடாத்திய சோதனையில் இராணுவம் பயன்படுத்தும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினா், இராணுவம் அங்கு சோதனையிட்டபோது இராணுவம் பயன்படுத்தும் உடல் கவசம் மற்றும் கொமாண்டோ படைப்பிரிவினா் பயன்படுத்தும் நீா் பை மற்றும் T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 2 மற்றும் பட்டாசுகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

இதனை தொடா்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் இஸ்லாமிய நபா் ஒருவா் சந்தேகத்தின் பெயரில் மேலதிக விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

Copyright © 5195 Mukadu · All rights reserved · designed by Speed IT net