சிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமான சாரதிக்கு கடூழியச்சிறை.

சிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமான சாரதிக்கு கடூழியச்சிறை.

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி சிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமாகவிருந்த வேன் சாரதிக்கு கடுமையான தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தீர்ப்பளித்தார்.

“விபத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்து மூவரின் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

அத்துடன், விபத்தில் உயிரிழந்த சிறுமி மற்றும் அவரது பாட்டனாரின் குடும்பத்துக்கு எதிரி 5 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் ஒரு வருட சிறைத் தண்டனையை எதிரி அனுபவிக்க வேண்டும்.

உயிரிழந்த முச்சக்கர வண்டிச் சாரதிக்கு 3 இலட்சம் ரூபா பணத்தை எதிரி இழப்பீடாக வழங்கவேண்டும்.

அதனைச் செலுத்தாவிடின் ஒரு வருட சிறைத் தண்டனையை எதிரி அனுபவிக்க நேரிடும். மேலும் 3 குற்றங்களுக்காக எதிரி தலா 2 ஆயிரத்து 500 ரூபா வீதம் 7 ஆயிரத்து 500 ரூபாவைத் தண்டமாகச் செலுத்தவேண்டும்.

எதிரியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாகத் தடை செய்யும் ஆணை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு நீதிமன்று வழங்குகிறது” என்று நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் தண்டனைத் தீர்ப்பளித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net