தற்கொலை தாக்குதல்கள் தமிழர்கள் மீதான 2ஆவது இன அழிப்பு!

தற்கொலை தாக்குதல்கள் தமிழர்கள் மீதான 2ஆவது இன அழிப்பு!

கிறிஸ்தவர்கள் மீது கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இரண்டாவது இன அழிப்பாகவே தாங்கள் பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“இரண்டாவது இன அழிப்பு சரியாக 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இனவழிப்பு இடம்பெற்றதைப் போன்றே சரியாக 10 வருடங்களில் இரண்டாவது இன அழிப்பு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டாவது இன அழிப்பில் தமிழ் கிறிஸ்தவர்களும் சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வந்த கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டில் எங்கு என்ன நடந்தாலும் தமிழ் மக்களிடமே அதற்கான பிரதிபலிப்பு வெளியப்படுகிறது.

அதன்படி, தமிழர் பிரதேசங்களை இராணுவத்தின் பிடிக்குள் வைத்திருப்பதை பாதுகாப்பு தரப்பு யுக்தியாக கொண்டிருக்கின்றன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net