கூட்டமைப்பினா் யாழ். பல்கலை மாணவர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் தலைவர் மற்றும் செயலாளரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் நோில் சென்று பாா்வையிட்டுள்ளனா்.
யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் இராணுவம், பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப்படையினா் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின்போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய ஒளிப்படம், மற்றும் மாவீரா்களுடைய ஒளிப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினா்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோா் பொலிஸ் உயா் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் கைது செய்யப்பட்ட மாணவா்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட மாணவா்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.