திவிரவாதிகளின் குண்டுத்தாக்கதல்களில் இறந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி

திவிரவாதிகளின் குண்டுத்தாக்கதல்களில் இறந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி

கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிரித்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட திவிரவாதிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்காக கிளிநொச்சி வர்த்தக சங்கமும், மாவட்ட சர்வமத சங்கமும் இணைந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கிளிநொச்சி ஏ9 வீதி உள்ள சித்திவிநாயகர் ஆலயத்தி இன்று(03.05.2019) இடம்பெற்றது.

கடந்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்திற்கு இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அகவணக்கமும் இடம்பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் சர்வமத இணைதலைவர்களும், சிம்மியமிசன் குருமுதல்வரும், வர்த்தகர்களும் என பலர் கலந்துகொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net