பிரபாகரனின் படத்துடன் யாழ்.பல்லைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் கைது!

பிரபாகரனின் படத்துடன் யாழ்.பல்லைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் கைது!

யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளரை கைது செய்துள்ளனர்.

யாழ்.பல்கலைகழக வளாகம் மற்றும் அதற்கு அருகில் உள்ள மாணவர் விடுதி என்பன இராணுவம் , பொலிசாரினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சுற்றி வளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது.

அதன்போது கலைப்பீட மாணவர் ஒன்றிய அலுவலக சோதனையிடப்பட்ட போது அதனுள் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன மீட்கப்பட்டன.

அவை தொடர்பில் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளரை இராணுவத்தினர் கைது செய்து கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இருவரையும் கோப்பாய் பொலிசார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை மாணவர் விடுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , விடுதியில் இருந்து இராணுவத்தினர் அணியும் சப்பாத்தை போன்று தோற்றமுடைய ஒரு சோடி சப்பாத்து , மற்றும் தொலைநோக்கி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

அவை தொடர்பிலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net