முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் கைதான இராணுவ வீரருக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் கைதான இராணுவ வீரருக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த 30 ஆம் திகதி கொக்குத்தொடுவாய், கோம்பாய் பகுதியில் நிலைகொண்டுள்ள விசேட படையினர் ( Sri Lanka Army Special Forces Regiment ) போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப் பகுதிக்கு சென்ற பொலிசார் படையினரை சோதனையிட்ட போது 35 மில்லிக்கிராம் குடு எனப்படும் போதைப்பொருள் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.

இந் நிலையில் கைதான இராணுவ வீரரை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Copyright © 7277 Mukadu · All rights reserved · designed by Speed IT net