அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புகள்!
நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள், அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புகள் கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தங்களது குடும்பத்தில் காணாமல் போன அல்லது, தேடப்பட்டு வருகின்ற நபர்கள் இருப்பார்களாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, குறித்த உடல்களை அடையாளப்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.