கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
நாளை சகல பாடசாலைகளும் ஆரம்பமாக உள்ள நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான சோதனைகளில் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்று காலை முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளிலும் சோதனை நடவடிக்கைகளை படையினர் முன்னுடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் இன்று படையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்த காட்சிகள் பதிவாகின.
நாளை தரம் ஆறுக்கு மேற்பட்ட வகுப்புக்கள் இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்திருந்த நிலையில், பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக இவ்வாறு படையினர் தீவிர சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.