சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கைக் கடிதம்!

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம்!

யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்

“இது முஸ்லிம் நாடு. கிருஸ்தவர்களுக்கு இங்கு இடமில்லை” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் கடிதம் தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என பெயரிடப்பட்ட தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் தாக்குதல்தாரிகளின் திட்டம் முற்றாக முறியடிக்கப்படவில்லை என்ற தகவலை புலனாய்வுப் பிரிவு கூறிவந்த நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில் நாளாந்தம் வெடிபொருட்களும், ஆயுதங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

தற்போது சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Copyright © 9442 Mukadu · All rights reserved · designed by Speed IT net