மன்னாரில் 06 செல் கவர்கள் மீட்பு

மன்னாரில் 06 செல் கவர்கள் மீட்பு

மன்னார் எழுத்தூர் பெரியகாமம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியில் இருந்து ஒரு தொகுதி செல் கவர் மூடப்பட்ட நிலையில் இன்று காலை 07 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பகுதியில் சோதனைகளை மேற்கொண்டனர்.

குறித்த காணியில் கொட்டப்பட்டிருந்த குப்பையுடன் சுமார் 6 செல் வெடி பொருளுக்கான கவர் மூடிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து குறித்த செல் கவரினை திறந்து பார்த்துள்ளனர்.

எனினும் அதனுல் செல் அல்லது வெடி பொருட்கள் எவையும் காணப்படவில்லை.

குறித்த 6 செல் கவரினையும் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 7988 Mukadu · All rights reserved · designed by Speed IT net