தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை!

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை!

கடலூர் – விருத்தாச்சலம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த 19 வயதுடைய திலகா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கல்லூரி பயின்று வரும் குறித்த மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் மர்மநபர்கள் திலகாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக எவரையும் இதுவரை கைது செய்யவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Copyright © 9468 Mukadu · All rights reserved · designed by Speed IT net