நெல்லியடியில் சிசுவின் சடலம் மீட்ப்பு

நெல்லியடியில் சிசுவின் சடலம் மீட்ப்பு

பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிசார்தெரிவித்தனர்.

நேற்று மாலை கரவெட்டி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையாக சிசு ஒன்றின் சடலம் காணப்படுவதாக நெல்லியடி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசுவின் சடலம் கை, தலைப்பகுதிகளில் காயங்களுடன் காணப்பட்டது.

சம்பவ இடத்தில் பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளதுடன் இன்று பருத்தித்துறை நீதிமன்றின் உத்தரவு பெறப்பட்டு சிசுவின் சடலம் மீட்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net