வடக்கின் முன்னாள் முதல்வரைச் சந்தித்துப் பேசிய சுரேன் ராகவன்!

வடக்கின் முன்னாள் முதல்வரைச் சந்தித்துப் பேசிய ஆளுநர் சுரேன் ராகவன்!

வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் இதன்போது வடக்கின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இக் கலந்துரையாடலின் போது, ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net