பருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் : 11 பேர் கைது!

பருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் : 11 பேர் கைது!

புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் 4 தமிழர்கள் உள்பட 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் சீருடைய ஒத்த வடிவமைப்புடைய துணிகளான ஆடைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. அதில் சிறுவர்களின் ஆடைகளும் உள்ளடங்கும்.

அவற்றை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 தமிழ் வர்த்தகர்களும் 7 முஸ்லிம் வர்த்தகர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 11 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட 11 பேரையும் செவ்வாய்க்கிழமை இரவு பதில் நிதவான் சுப்பிரமணியம் இல்லத்தில் முன்னிலைப்படுத்திய போது குறித்த நபர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார் .

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net