மீண்டும் வென்றது இந்தியா!

இந்தியா மீண்டும் வென்றுள்ளது என தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில் மோடி இவ்வாறான டுவிட்டர் பதிவை இட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும், ‘ஒன்றாக இணைந்து நாம் வளர்வோம். ஒன்றாக சேர்ந்து வளர்ச்சியை எட்டுவோம்.

அனைவரையும் ஒன்றாக இணைத்து வழி நடத்தி மிக வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வென்றுள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மக்களவைத் தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று வரும் நிலையில் இது தொடர்பாக முதன்முதலாக தனது கருத்தை பிரதமர் மோடி டுவிட்டர் பதிவாக இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Copyright © 6505 Mukadu · All rights reserved · designed by Speed IT net