2020 தரம் 01 விண்ணப்பம் மே 28 இல் வெளியீடு.

2020 தரம் 01 விண்ணப்பம் மே 28 இல் வெளியீடு.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்கு பாடசாலைகளில் தரம் 01 மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் மற்றும் விண்ணப்பம் எதிர்வரும் 27 ஆம் திகதி பத்திரிகைகளுக்கு அனுப்பவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அது தொடர்பான பத்திரிகை விளம்பரம் எதிர்வரும் மே 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.

குறித்த சுற்றுநிரூபம் மற்றும் விண்ணப்பத்தை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ( www.moe.gov.lk ) வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Copyright © 8267 Mukadu · All rights reserved · designed by Speed IT net