மோடியின் பதவியேற்பு நிகழ்வில் மைத்திரி!

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசாங்கத்திலிருந்தும் எதிர்க்கட்சித்திலிருந்தும் அனைத்து இலங்கைத் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி இந்தியாவின் பிரதமராக மீண்டுமொருமுறை நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்.

அந்தவகையில் நியூ டெல்லியில் நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொள்வார் என ஜனாதிபதி அலுவலக அதிகாரி தகவல் தெரிவித்தார்.

பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரி தொலைபேசி ஊடக உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியின் பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 3187 Mukadu · All rights reserved · designed by Speed IT net