உலகின் விலை உயர்ந்த மருந்து!

உலகின் விலை உயர்ந்த மருந்து!

உலகில் மிக விலை உயர்ந்த மருந்து 2.125 மில்லியன் டொலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

உலக அளவில் விலை அதிகமான மருந்து எது என்பதை உணவு மற்றும் மருந்துகள் தயாரிப்பு நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,

நோவர்ட்டீஸ் மருந்துகள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும், மிகவும் அரிதான முதுகெலும்பு மரபணு சிகிச்சைக்கு பயன்படும் ‘ஒன்செம்னோஜன் சொல்ஜென்ஸ்மா’ தான் விலை உயர்ந்த மருந்து ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளின் தசைகளை அசைக்க முடியாமல் இறுதியில் விழுங்கவோ அல்லது மூச்சுவிடவோ முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும் குறைபாடுடைய மரபணுவை இலக்கு வைத்தே இந்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net