தமிழினப்படுகொலையை ஏற்றுக்கொண்ட கனேடிய மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

தமிழினப்படுகொலையை ஏற்றுக்கொண்ட கனேடிய மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்ட கனேடிய மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 1983 இலிருந்து 2009 வரை 26 ஆண்டுகளாக சிவில் யுத்தம் நடைபெற்றபோது தமிழர் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக் கொண்டதற்காக மேயர் Patrick Brown இற்கு எதிராகவே சிங்கள சமூகத்தினரால் கனடாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Patrick Brown இனப்படுகொலை இடம்பெற்றதாக ஏற்றுக் கொள்வதை விமர்சித்து பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘ஒரு தேசிய இனத்தை அல்லது சமய குழுவை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள்தான் இனப்படுகொலை, என்பதன் விளக்கத்தின்படி பார்த்தால், இலங்கையில் அது நடக்கவில்லை’ உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்றிருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net