ஆளுநருக்கும் சிறிதரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பு.

ஆளுநருக்கும் சிறிதரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பு.

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறீதரன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று(28) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் சமூக நிலைமைகள் குறித்தும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன் அம்மக்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்த கௌரவ ஆளுநரால் மாகாணத்தினுள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ள விவசாய பண்ணைகள் மற்றும் மர முந்திரிகை தோட்டங்களை கூட்டுறவு முறையினூடாக அப்பிரதேசங்களின் மக்களுக்கு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் ஆளுநர் அவர்களுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வடமாகாணத்தின் தண்ணீர் மற்றும் காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கௌரவ ஆளுநர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தனது பூரண ஆதரவினை தெரிவித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மக்களுக்கு நன்மைபயக்கும் ஆளுநரின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net