ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்!

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்!

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்.நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகைக்காக கூடும் இஸ்லாமியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக ஐந்து சந்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net