//anjeng நொச்சியாகம பகுதியில் விபத்து; இளைஞர் பலி! | Mukadu

நொச்சியாகம பகுதியில் விபத்து; இளைஞர் பலி!

நொச்சியாகம பகுதியில் விபத்து; இளைஞர் பலி!

வவுனியா, நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு, நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து நேற்று (28) வேனில்விமான நிலையத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே, நொச்சியாகம பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நொச்சியாகம பகுதியிலுள்ள பாலமொன்றில் குறித்த வேன் மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் வவுனியா, தவசிகுளத்தினை சேர்ந்த விஜயகுமார் தனுசன் (23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net