கிளிநொச்சிக்கு கைத்தொழில் வணிக வாணிப பிரதி அமைச்சர் விஜயம்.

கிளிநொச்சிக்கு கைத்தொழில் வணிக வாணிப பிரதி அமைச்சர் விஜயம்.

கைத்தொழில் வணிக வாணிப பிரதி அமைச்சர் புத்திக பத்திரண இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் தொழில் பயிற்சி நிலைய மண்டபத்தில் கைத்தொழில் உற்பத்தியாளர்களுடனான விசேட கலந்துரையாடல் மற்றம் குறைகளை அறிந்து கொள்ளும் கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கைத்தொழில் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

இதேவேளை இவர்களிற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

சுயதொழில் ஈடுபடுவோருக்கான ஓவ்வு ஊதியம் என்பது பெரும் சவாலாக உள்ளது. இவர்களிற்கான ஓய்வு ஊதியம் வழங்கும் முன்னர் முதல் கட்டமாக காப்புறுதியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவ்வருடத்திற்குள் காப்புறுதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் இதன்போது கைத்தொழில் உற்பத்தியாளர்களிற்கு தெரிவித்தார்.

Copyright © 4281 Mukadu · All rights reserved · designed by Speed IT net