மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்!

மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்!

மோடி தலைமையிலான புதிய அரசு தனது முதல் பட்ஜெட்டை எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி தாக்கல் செய்யவுள்ளது.இந்த பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அவ்வகையில், 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 17ஆம் திகதி தொடங்கி ஜூலை 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கூட்டத் தொடரின் முதல்நாளான ஜூன் 17ஆம் திகதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளனர்.

அத்துடன், ஜூன் 19ஆம் திகதி மக்களவைக்கு சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தவுள்ளார்.மேலும், ஜூலை 4ஆம் திகதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net